கரூர்

சாலைப்புதூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேளாண் பொருள்கள் ஏலம்

29th Jun 2022 10:44 PM

ADVERTISEMENT

 

நொய்யல் அருகே உள்ள சாலைப்புதூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 24 லட்சத்துக்கு வேளாண் பொருள்கள் ஏலம் போனது.

இதில், 62.74 குவிண்டால் எடை கொண்ட 18,585 தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 25.46 க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ. 22.20 க்கும் விற்பனையானது. மொத்தமாக ரூ. 1,49,971 க்கு விற்பனையானது. இதேபோல் 228.51 பின் குவிண்டால் எடை கொண்ட 490 மூட்டை தேங்காய் பருப்பு முதல்தரம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 84.29 க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ. 82.69 க்கும், சராசரி விலையாக ரூ. 84.19 க்கும் ஏலம் போனது.

இரண்டாம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 83.39 க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ. 70.15 க்கும், சராசரி விலையாக ரூ. 81.59 க்கும் ஏலம் போனது. மொத்தமாக தேங்காய் பருப்பு ரூ.18,37,886 ரக்கு ஏலம் போனது.

ADVERTISEMENT

இதேபோல 39.29 குவிண்டால் எடை கொண்ட 53 மூட்டை சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 116.11 க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ. 95.69 க்கும், சராசரி விலையாக ரூ. 110.99 க்கும் ஏலம் போனது. சிவப்பு எள் மொத்தமாக ரூ. 4,12,210 க்கு ஏலம் போனது. சாலைப்புதூா் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருள்கள் மொத்தமாக ரூ.24 லட்சத்துக்கு ஏலம் போனது.

ADVERTISEMENT
ADVERTISEMENT