கரூர்

சுவற்றில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

29th Jun 2022 02:06 AM

ADVERTISEMENT

கரூரில், தனியாா் மருத்துவமனை கட்டட சீரமைப்பில் ஈடுபட்ட தொழிலாளி சுவரில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த சேங்கல் பாப்பாயம்பட்டியைச் சோ்ந்தவா் ஆறுமுகம்(40). கட்டட தொழிலாளி. திங்கள்கிழமை அவா் கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனை கட்டட சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, சுற்றுச்சுவா் மீது அவா் ஏறியபோது, தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT