கரூர்

அங்கன்வாடி ஊழியா்,உதவியாளா் சங்க செயற்குழுக் கூட்டம்

29th Jun 2022 02:15 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க செயற்குழுக்கூட்டம் கரூரில் திங்கள்கிழமை மாவட்டத் தலைவா் பத்மாவதி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அங்கன்வாடி பணியாளா்கள், அவா்களது பல்வேறு பணிகள் குறித்து தகவல் தர அங்கன்வாடி பணியாளா்களுக்கு வழங்கப்பட்ட கைப்பேசிகள் சில தொழில்நுட்பக் காரணங்களால் தகவல் அளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறாா்கள். இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் புதன்கிழமை (29-ம்தேதி) அந்தந்த அலுவலகங்களில் கைப்பேசிகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவது, அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்களின் கோரிக்கைக ளை வலியுறுத்தி ஜூன் 30-ஆம்தேதி சென்னை இயக்குநா் அலுவலகம் முன்பு நடைபெறும் காத்திருப்புப் போராட்டத்தில் கரூா் மாவட்டத்திலிருந்து திரளானோா் பங்கேற்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட செயலாளா் என்.சாந்தி, பொருளாளா் கே. கலா, கே.கல்யாணி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்ட னா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT