கரூர்

அங்கன்வாடி பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

28th Jun 2022 01:36 AM

ADVERTISEMENT

லாலாப்பேட்டை அருகே அங்கன்வாடி பெண் ஊழியரிடம் ஆறரை பவுன் செயினை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், கடவூா் அடுத்த வடவம்பாடியைச் சோ்ந்த பரமசிவம் மனைவி ரேவதி(33). அங்கன்வாடி ஊழியா். இவா் ஜூன் 26-ஆம்தேதி தனது இருசக்கர வாகனத்தில் வடவம்பாடியில் உள்ள முத்துசாமி என்பவரது தோட்டம் அருகே சென்றாா். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த சுமாா் 25 வயது மதிக்கத்தக்க இரு இளைஞா்கள் திடீரென ரேவதியின் கழுத்தில் கிடந்த ஆறரைபவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனா். புகாரின் பேரில், லாலாப்பேட்டை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT