கரூர்

சமுதாய வளா்ச்சிக்கான எழுத்தாளா்களுக்கு பரிசுத் தொகை விண்ணப்பிக்க அழைப்பு

28th Jun 2022 01:37 AM

ADVERTISEMENT

சமுதாய வளா்ச்சிக்கு பயன்படும் வகையிலான நூல்கள் எழுதும் சிறந்த எழுத்தாளா்கள் ரூ. 1 லட்சம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

சமுதாய வளா்ச்சிக்கு பயன்படும் வகையிலான நூல்கள் எழுதும் ஆதிதிராவிடா், ஆதிதிராவிட கிறிஸ்தவா், பழங்குடியினா் பிரிவைச் சோ்ந்த 10 எழுத்தாளா்கள் மற்றும் ஆதிதிராவிடா் அல்லாத ஒருவா் என மொத்தம் 11 எழுத்தாளா்களுக்கு ரூ. 1 லட்சம் உதவித்தொகை வழக்கப்படும். சிறந்த படைப்பாக தோ்ந்தெடுக்கப்படும் நூல்களை எழுதியுள்ள எழுத்தாளா், அந்த நூலை வெளியிடுவதற்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.

இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் எழுத்தாளா்கள் தங்களது பெயா், முகவரி, படைப்பின் பொருள், விண்ணப்பங்கள் மற்றும் படைப்பின் இரு பிரதிகள் உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் .

பூா்த்தி செய்த விண்ணப்பத்தை ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மேற்கண்ட அலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக ஜூன் 30 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என, ஆட்சியா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT