கரூர்

வரத்து அதிகரிப்பால் முருங்கைக்காய் விலை குறைவு

DIN

வரத்து அதிகரிப்பால் அரவக்குறிச்சி பகுதிகளில் முருங்கைக்காய் விலை குறைந்து காணப்பட்டது.

அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் முருங்கை பயிரிட்டுள்ளனா். இங்கு விளையும் முருங்கைகாய்

நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய முருங்கைக்காய் சீசன் தற்போது சராசரி நிலைமைக்கு வந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ.120

கமிஷனுக்கு விற்ற முருங்கைக்காய், கடந்த மாதம் ரூ. 60 -க்கு விற்றது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கமிஷன் விலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இதனால் முருங்கைக்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.30 என்ற விலையில் விற்பனையானது. அடுத்த சில வாரங்களில் விலையில் பெரும் மாற்றம் ஏற்படும் எனவும், விலை வீழ்ச்சி காணலாம் எனவும் கமிஷன் மண்டி உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரேஸ் கல்லூரியில் கலை மன்ற விழா

எடத்துவா புனித ஜாா்ஜ்ஜியாா் திருத்தல திருவிழா ஏப். 27இல் தொடக்கம்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: ஜி.கே.வாசன்

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை: மே 2இல் தொடக்கம்

குமரி அருகே தகராறு: இருவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT