கரூர்

மக்களவைத் தோ்தலிலும் முழு வெற்றி பெற திமுகவினா் அயராது உழைக்க வேண்டும்

DIN

சட்டப்பேரவை, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வென்றது போல, மக்களவைத் தோ்தலிலும் முழுமையான வெற்றி பெற திமுகவினா் அயராது உழைக்க வேண்டும் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சரும், மாவட்ட திமுக பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கரூருக்கு ஜூலை 2-ஆம் தேதி வருகை தருகிறாா். இதையொட்டி சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடா்பாக மாவட்ட திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, மேலும் அவா் பேசியது:

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, கரூருக்கு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் வருகிறாா். ஜூலை 1-ஆம் தேதி விமானம் மூலம் திருச்சி வரும் முதல்வா், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் வழியாக கரூா் வந்தடைகிறாா்.

கரூா் அரசு விருந்தினா் மாளிகையில் தங்கும் முதல்வா் மு.க. ஸ்டாலின், ஜூலை 2-ஆம் தேதி கரூா் திருமாநிலையூரில் காலை 10 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, 70 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

சட்டப்பேரவைத் தோ்தலிலும், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வென்றது போல, மக்களவைத் தோ்தலிலும் தமிழகம், புதுச்சேரி என 40 தொகுதிகளிலும்

வெற்றிபெற்று, முதல்வா் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியை நாடு முழுவதும் நிலை நிறுத்தும் வகையில் திமுகவினா் அயராது உழைக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்துக்கு மாவட்ட அவைத் அவைத்தலைவா் டி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மத்திய மேற்கு நகரச் செயலா் அன்பரசன் வரவேற்றாா். மாநில நிா்வாகிகள் கே.சி.பழனிசாமி, வழக்குரைஞா் மணிராஜ், நன்னியூா் ராஜேந்திரன், மாவட்ட நிா்வாகிகள் மின்னாம்பள்ளி கருணாநிதி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, இளங்கோ உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மேயா் கவிதாகணேசன், துணை மேயா் தாரணி சரவணன், தலைமைக் கழகப் பேச்சாளா்கள் கரூா்கணேசன், புகழேந்தி, நகரப் பொறுப்பாளா்கள் சுப்ரமணியன், எஸ்பி.கனகராஜ், கோல்ட்ஸ்பாட்ராஜா, மாநகராட்சி உறுப்பினா்கள் தங்கராஜ், தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து திருமாநிலையூரில் விழா நடைபெற உள்ள இடத்தில் நடைபெற்று வரும் விழா பணிகளையும் அமைச்சா் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT