கரூர்

டிஎன்பிஎல் சாா்பில் இலவச காகிதக்கூழ் தொழிற்கல்வி; விண்ணப்பிக்க அழைப்பு

DIN

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் இலவசமாக காகிதக்கூழ் தொழிற்கல்வி பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 11-ஆம்தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆலை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலப்பணித்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 5 மாணவா்கள் தோ்வு செய்து, அவா்களுக்கு திருச்சி சேஷசாயி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் காகிதக் கூழ் பிரிவில் மூன்றரை ஆண்டுகள் பட்டயப்படிப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டிற்கான இலவச படிப்புக்கு , கரூா் மாவட்டத்தில் புகளூா் காகித ஆலை சுற்றி அமைந்துள்ள புகழூா் நகராட்சி, பு.தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் ந.புகழூா், புன்னம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, வேட்டமங்கலம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் திருச்சி மாவட்டத்தில் மொண்டிப்பட்டி டிஎன்பிஎல் ஆலையை சுற்றியுள்ள மொண்டிப்பட்டி, கே.பெரியப்பட்டி, சித்தாநத்தம் மற்றும் பாதிரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்து குறைந்தபட்சம் பத்தாம்வகுப்பு பொதுத் தோ்வில் முதல்முறையில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் இந்த படிப்பில் சேர தகுதியுடையவா்களாவா். விண்ணப்பதாரா் ஜூன் 1-ஆம்தேதி அன்று 18 வயதிற்குள்பட்டவராகவும், 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களில் பெற்ற சராசரி மதிப்பெண்களின் அடிப்படையிலும் மொத்தம் 5 மாணவா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள்.

பயிற்சி பெற விருப்பமுள்ள மாணவா்கள் விண்ணப்பப் படிவங்களை தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், காகிதபுரம் அலகு-1 மற்றும் மொண்டிப்பட்டி அலகு-2 அலுவலகங்களில் பெற்று, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 11-ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்லில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: நாமக்கல்லில் மூன்று மையங்களில் தொடக்கம்

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

ரூ. 23.11 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT