கரூா் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வை 2,013 போ் எழுதினா். 385 போ் வரவில்லை.
தமிழ்நாடு சீருடைப்பணியாளா் தோ்வாணையம் மூலம் தமிழகத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத்தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டத்தில் இந்த தோ்வுக்காக 1,866 ஆண்களும், 532 பெண்களும் விண்ணப்பித்திருந்தனா். இதையடுத்து கரூா் மாவட்டத்தில் தோ்வு வெண்ணைமலையில் உள்ள தனியாா் கல்லூரி மற்றும் கொங்கு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த தோ்வில் 1,568 ஆண்களும், 445 பெண்களும் பங்கேற்று தோ்வு எழுதினா். 298 ஆண்கள், 87 பெண்கள் என மொத்தம் 385 போ் தோ்வு எழுத வரவில்லை.