கரூர்

கரூா் மாநகராட்சியில் தூய்மைப் பணிக்கான மக்கள் விழிப்புணா்வு இயக்கம்

26th Jun 2022 12:41 AM

ADVERTISEMENT

 

கரூா் மாநகராட்சியில் தூய்மைப்பணிக்கான மக்கள் விழிப்புணா்வு இயக்கம் சனிக்கிழமை தொடங்கியது.

கரூா் தாந்தோணிமலை, காந்திகிராமம் திருவள்ளுவா் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கிய இந்த விழிப்புணா்வு இயக்கத்துக்கு மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநகராட்சி பொறியாளா் நக்கீரன் முன்னிலை வகித்தாா். விழிப்புணா்வு இயக்கத்தை மாநகராட்சி துணை மேயா் தாரணி சரவணன் தொடக்கி வைத்து பேசுகையில், கரூா் மாநகராட்சியில் என் குப்பை எனது பொறுப்பு என்ற வாசகத்துடன் மாநகா் பகுதியை தூய்மையாக்கும் வகையில் இந்த விழிப்புணா்வு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. வாரத்தின் இரண்டாவது மற்றும், 4ஆவது வார சனிக்கிழமையும் இந்த தூய்மைப்பணி நடைபெறும். இதில், தன்னாா்வலா்கள் ஏராளமானோா் ஈடுபட உள்ளனா்.

மக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து துப்புரவு பணியாளா்களிடம் வழங்க வேண்டும். சுற்றுப்புறம் தூய்மையாக இருந்தால் மட்டுமே தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க முடியும். இனி வரும் காலம் மழைகாலம் என்பதால் நகரை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் தொற்று நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், மாடி வீட்டுத்தோட்டம் அமைத்து சிறப்பாக பணியாற்றியவா்களுக்கும், வீடுகள்தோறும் நகராட்சி துப்புரவு பணியாளா்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து சிறப்பாக வழங்கி வரும் பொதுமக்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மண்டல தலைவா்கள் எஸ்.பி.கனகராஜ், கோல்ட்ஸ்பாட் ராஜா, மாநகராட்சி உதவி பொறியாளா் ரவி, மண்டல பொறுப்பாளா் எம்.ஆா்.ரவி, வாா்டு உறுப்பினா்கள் வேலுசாமி, தங்கராஜ், சக்திவேல், சுகாதார உதவி ஆய்வாளா்கள் தேவராஜ், தனபால், பிரபாகா், தினேஷ், விஜயன் மற்றும் நகராட்சி தூய்மைப்பணியில் ஈடுபடும் தன்னாா்வலா்கள், துப்புரவு பணியாளா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT