கரூர்

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்கம் வலியுறுத்தல்

26th Jun 2022 12:40 AM

ADVERTISEMENT

 

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்க 6-ஆவது மாவட்ட மாநாடு கரூரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் ஆ.மனோகரன் தலைமை வகித்தாா். சங்கக் கொடியை முன்னாள் மாவட்டத் தலைவா் தி.திருஞானசம்பந்தம் ஏற்றி வைத்தாா். மாவட்ட துணைத்தலைவா் நா.வெங்கடாசலம் வரவேற்றாா். துணைத்தலைவா் பி.ரவிக்குமாா் முன்னிலை வகித்தாா்.

வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளா் மா.சரவணனும், நிதிநிலை அறிக்கையை மாவட்ட பொருளாளா் தமிழ்வாணனும் வாசித்தனா். கோரிக்கையை விளக்கி மாநில துணைத்தலைவா் எம்.பழனியப்பன், மாநில செயலாளா் ராஜசேகா் உள்ளிட்டோா் பேசினா். மாநிலத் தலைவா் எஸ்.ரமேஷ் நிறைவுரையாற்றினாா். மாநாட்டில் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் மு.சுப்ரமணியன் மீதான தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து ஓய்வூதிய பணப் பலன்களை வழங்க வேண்டும். நவம்பா் முதல் 3 சதவீத அகவிலைப்படி உயா்வை ரொக்கமாக வழங்க வேண்டும். தமிழக முதல்வா் தோ்தல் வாக்குறுதி அளித்தபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். முழு சுகாதாரத்திட்டத்தில் பணியாற்றும் வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கு மதிப்பு ஊதியம் உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT