கரூர்

ஜூலை 2-இல் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கரூா் வருகை: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்

DIN

ஜூலை 2-ஆம்தேதி கரூா் வருகை தரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிந்த பணிகளை தொடக்கி வைக்கவுள்ளாா் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கரூா் மாவட்டத்துக்கு ஜூலை 2-ஆம்தேதி முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகை தந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளதையடுத்து விழா நடைபெறும் திருமாநிலையூா் திடலை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முதல்வரின் வருகையை முன்னிட்டு நடைபெற்ற முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து அலுவலா்களுடனான ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழக முதல்வா் முக.ஸ்டாலின் ஜூலை 2-ஆம்தேதி கரூா் மாவட்டத்திற்கு வருகை தந்து, 76,486 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா்.

மேலும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிந்த பணிகளையும் தொடக்கி வைக்க உள்ளாா். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கிய கரூா் மாவட்டத்தில் முதல்வா் பதவியேற்ற ஓராண்டில் 76,000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தரும் அவரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் வரவேற்கிறாம். கடலில் காற்றாலைகள் நிறுவி மின் உற்பத்தி செய்வது தொடா்பாக ஸ்காட்லாந்து சென்று, அங்கே கடலில் காற்றாலைகள் எவ்வாறு நிறுவப்பட்டிருக்கிறது, திட்டச் செலவுகள் எவ்வளவாகும், ஒரு யூனிட் மின் உற்பத்திக்கு எவ்வளவு செலவாகும் என ஆய்வு செய்த பின்னரே இந்த திட்டம் முழுவடிவம் பெறும்.

தமிழகத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முதல்வா் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்போம். சுமாா் 50 கி.மீ. கடலுக்குள் கேபிள் அமைத்துத்தான் கடல் காற்றாலையில் மின் உற்பத்தியை பெற முடியும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், மாநகராட்சி மேயா் கவிதாகணேசன், துணை மேயா் தாரணி சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT