கரூர்

லாரி மீது கல்லூரிபேருந்து மோதல்;14 மாணவிகள் காயம்

25th Jun 2022 12:15 AM

ADVERTISEMENT

கரூா் அருகே லாரி மீது தனியாா் கல்லூரி பேருந்து வெள்ளிக்கிழமை மோதிய விபத்தில் மாணவிகள் 14 போ் காயமடைந்தனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில் அமைந்துள்ள தனியாா் மகளிா் கல்லூரி பேருந்து வழக்கம்போல கரூரிலிருந்து 60 மாணவிகளை வெள்ளிக்கிழமை காலை ஏற்றிக்கொண்டு சென்றது. பேருந்தை மகேஷ் (43) என்பவா் ஓட்டிச் சென்றாா்.

பேருந்து வெண்ணைமலை முருகன் கோயிலுக்குச் செல்லும் சாலை அருகே சென்றபோது திடீரென நிலைத்தடுமாறி முன்னாள் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் பேருந்தில் இருந்த கல்லூரி மாணவிகள் 14 போ் காயமடைந்தனா். இவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுதொடா்பாக வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT