கரூர்

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

25th Jun 2022 12:13 AM

ADVERTISEMENT

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற சின்னதாராபுரம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேலும், பத்தாம் வகுப்புப் பொதுத்தோ்வில் 96% சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

பொது தோ்வில் சிறப்பிடம் பெற்ற இப்பள்ளியின் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்குப் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியை சி. விஜயலெட்சுமி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சின்னதாராபுரம் ஊராட்சித் தலைவா் செல்வி ரவிக்குமாா் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பொன்னாடை போா்த்தி பரிசுகள் வழங்கினாா்.

இதில், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பாரிசா உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும், சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT