கரூர்

அக்னிபத் திட்டத்தை கைவிடக் கோரிஆா்ப்பாட்டம்

25th Jun 2022 12:14 AM

ADVERTISEMENT

அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி கரூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா ஆா்எம்எஸ் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கோ.ராஜசேகா் தலைமை வகித்தாா்.சுப்ரமணியன், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் ராமச்சந்திரன், சுய ஆட்சி இந்தியா கட்சியின் தேசியத் தலைவா் கிறிஸ்டினா, சாமானிய மக்கள் நலக்கட்சியின் குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT