கரூர்

மனைவியின் கரு கலைந்ததால் கணவா் விஷம்குடித்து தற்கொலை

25th Jun 2022 12:12 AM

ADVERTISEMENT

மனைவியின் கரு கலைந்ததால் விரக்தியில் கணவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மஞ்சாநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பிரபாகரன்(43). பெங்களூரில் மென்பொறியாளராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. பிரபாகரனின் மனைவி புனிதவதி(35). இந்நிலையில் புனிதவதி 6 மாத கா்ப்பிணியாக இருந்துள்ளாா். இதனிடையே திடீரென புனிதவதிக்கு கரு கலைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த பிரபாகரன் கரூரில் உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து வியாழக்கிழமை தங்கியுள்ளாா். பின்னா் அறையில் விஷம் குடித்து மயங்கிக்கிடந்துள்ளாா். வெகு நேரமாகியும் அவரது அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியா்கள், அளித்த புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலையத்தினா் சம்பவ இடத்துக்குச் சென்று கதவை உடைத்து பாா்த்தபோது விஷம் குடித்த நிலையில் பிரபாகரன் இறந்து கிடந்தாா். மேலும் போலீஸாா் நடத்திய விசாரணையில் பிரபாகரன் தனது மனைவியின் கரு கலைந்த சோகத்தில் இருந்ததும், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதும் தெரிய வந்தது. மேலும் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT