கரூர்

விஜயகாந்த் நலம்பெற வேண்டி கரூரில் தேமுதிகவினா் கோயிலில் சிறப்பு வழிபாடு

25th Jun 2022 12:14 AM

ADVERTISEMENT

தேமுதிக தலைவா் விஜயகாந்த் பூரண நலம்பெற வேண்டி கரூரில் அக்கட்சியினா் மாரியம்மன்கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினா்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவா் விஜயகாந்த் பூரண நலம்பெற வேண்டி கரூா் மாவட்ட தேமுதிக சாா்பில் மகாமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் அரவை எம்.முத்து தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாட்டில் மாநகர மாவட்டபொருளாளா் கலையரசன், மாவட்ட துணைச் செயலாளா்கள் அனிதாஆனந்த் , பழனிவேல், தலைமை செயற்குழு உறுப்பினா் காளிமுத்து, பொதுக்குழுஉறுப்பினா்கள் பசுவைபாலசுப்ரமணி, ராஜ்குமாா் உளள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் விஜயகாந்த் பெயரில் சிறப்பு பூஜை செய்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT