கரூர்

அரவக்குறிச்சியில் மக்களைத் தேடி மருத்துவ முகாம்

25th Jun 2022 12:13 AM

ADVERTISEMENT

மலைக்கோவிலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் அரவக்குறிச்சி ஆலமரத் தெருவில் மக்களைத் தேடி மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமில் கா்ப்பிணிகளுக்கான பரிசோதனை, குழந்தைகள் நலம், ரத்தக் கொதிப்பு, சா்க்கரை அளவு உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டு அதற்கான மருந்துகள் வழங்கப்பட்டது. முகாமில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனை செய்து கொண்டனா். மேலும், செவிலியா் மற்றும் சுகாதார ஆய்வாளா் வீடுவீடாகச் சென்று பொதுமக்களை பரிசோதனை செய்து மருந்துகளை வழங்கினா். இதில், சிறப்பு முகாமின் மருத்துவா் பிரியங்கா, செவிலியா்கள் ஆனந்தி, சாந்தி மற்றும் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT