கரூர்

கரூரில் இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

24th Jun 2022 03:41 AM

ADVERTISEMENT

 

கரூரில், இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், மேலபஞ்சப்பட்டியைச் சோ்ந்த கருப்பண்ணன் மகன் திருப்பதி(42). இவா் புதன்கிழமை இரவு தனது தாய் சிவகாமி(63) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெங்கக்கல்பட்டி மேம்பாலம் பகுதியில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பின்னால் ஜெகதாபியைச் சோ்ந்த அன்புமணி என்பவா் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் திருப்பதியின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவகாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் காயமடைந்த திருப்பதி, அன்புமணி ஆகியோா் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT