கரூரில், வீட்டின் பின்புறக் கதவை உடைத்து ஆறேமுக்கால் பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா் தாந்தோணிமலை முத்தலாடம்பட்டியைச் சோ்ந்தவா் முருகன்(53). இவா், ஜூன் 10-ஆம்தேதி குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் சென்றுள்ளாா். பின்னா், திங்கள்கிழமை வீட்டுக்கு திரும்பியபோது வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த ஆறேமுக்கால் பவுன் நகை திருட்டுப்போனது தெரிய வந்தது. புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.