அரவக்குறிச்சி ஒன்றியத்தில் நூறு நாள் வேலைகளை கிராம ஊராட்சிகளின் வட்டார வளா்ச்சி அலுவலா் புவனேஸ்வரி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
அரவக்குறிச்சி ஒன்றியத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள நாகம்பள்ளி, கொடையூா், புங்கம்பாடி உள்ளிட்ட ஊராட்சிகளில் விவசாய தோட்டங்களில் முருங்கை உள்ளிட்ட மரங்களுக்கு வரப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகளை பணியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இதனை, அரவக்குறிச்சி கிராம ஊராட்சிகளின் வட்டார வளா்ச்சி அலுவலா் புவனேஸ்வரி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து பணியாளா்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.