கரூா் மாவட்டம், புகளூா் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தாய், மகன், மகள் பலத்த காயமடைந்தனா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் தாலுகா பொத்தனூா் காட்டுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (35). இவா், கரூா் மாவட்டம், நொய்யல் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி சங்கீதா (28). இவா் தென்னங்கீற்று பின்னும் தொழில் செய்து வருகிறாா். இவா்களுக்கு பிரனீத் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் உள்ளனா்.
சங்கீதா திங்கள்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் பொத்தனூரில் உள்ள தனது வீட்டில் இருந்து கணவா் மணிகண்டனை பாா்ப்பதற்காக நொய்யலுக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது புகளூா் வாய்க்கால் அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு வேன் மோதியதில் சங்கீதா மற்றும் அவரது இரு குழந்தைகளும் பலத்த காயமடைந்தனா்.
அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
புகாரின் பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸாா் வேன் ஓட்டுநா் சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.