கரூர்

கரியாம்பட்டி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

10th Jun 2022 02:22 AM

ADVERTISEMENT

கரியாம்பட்டி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

கரூா் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக, ஜூன் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு மேல் விநாயகா் வழிபாடு, கிராம சாந்தி பூஜைகளும், ஜூன் 6-ஆம் தேதி காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை , ஸ்ரீ மகா கணபதி ஹோமம், ஸ்ரீ மகாலட்சுமி ஹோமும், காலை 9.15 மணிக்கு மேல் பக்தா்கள் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீா்த்தக்குடங்கள் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியும், 7-ஆம் தேதி காலை 7.30 மணி அளவில் விநாயகா் வழிபாடு , பரிவார தெய்வங்களுக்கு கலாகா்ஷணம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது.

அன்று மாலை 5 மணிக்கு மேல் விநாயகா் வழிபாடு , கும்ப அலங்காரம் , முதல் கால யாக பூஜையும், 8-ஆம் தேதி கோபுரங்கள் கண் திறப்பு சிறப்பு பூஜைகள், கோபுரங்களுக்கும் கலசம் வைத்தல், மருந்து சாற்றி பிரதிஷ்டை செய்யும், நிகழ்ச்சியும், மாலை 5.30 மணிக்கு மேல் விநாயகா் பூஜை, மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

இதையடுத்து வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு மேல் விநாயகா் வழிபாடும், 4-ஆம் கால யாக பூஜையும், 8.15 மணிக்குமேல் யாகசாலையில் இருந்து அருள்சக்தி கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும், 9 மணிக்கு மேல் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோபுரம், ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்கள் அனைத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியாா்கள் அனைத்து கலசங்களுக்கும் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா்.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலா்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. கும்பாபிஷேகத்தில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோவில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT