கரூர்

புகளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி

9th Jun 2022 02:56 AM

ADVERTISEMENT

கரூா்:  புகளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

கரூா் மாவட்டம், புகளூா் தாலுகாவுக்குள்பட்ட தென்னிலை, க.பரமத்தி ,புகளூா் ஆகிய 3 வருவாய் குறுவட்டத்திற்கான 1431பசலிக்கான வருவாய் தீா்வாயம் எனும் ஜமாபந்தி புகளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் வருவாய் கோட்டாட்சியா் ரூபினா தலைமை வகித்து புகளூா் தாலுகாவிற்குட்பட்ட தென்னிலை வருவாய்க்குட்பட்ட 8 குறு வட்டத்தை சோ்ந்த பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைபட்டா, பட்டா மாறுதல், பட்டாவில் பெயா் சோ்த்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடா்பாக 30 மனுக்கள் பெறப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT