கரூா்: கரூரில், கோயில் கூட்ட நெரிசலில் ஆசிரியையிடம் எட்டரை பவுன் செயினை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா் வேலுசாமிபுரத்தைச் சோ்ந்த மோகன்ராஜ் மனைவி சுபிதா(31). பள்ளி ஆசிரியை. இவா், குடும்பத்துடன் மே 24-ஆம்தேதி கரூா் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவுக்கு சென்றபோது கூட்ட நெரிசலில் இவரது கழுத்தில் கிடந்த எட்டரை பவுன் செயினை யாரோ மா்ம நபா்கள் பறித்துச் சென்றுவிட்டனா். இதுகுறித்து சுபிதா செவ்வாய்க்கிழமை கரூா் நகர காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.