வைகாசி மாத வளா்பிறை அஷ்டமியையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்களில் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நஞ்சைப்புகளூரிலுள்ள மேகபாலீசுவரா் கோயிலில் காலபைரவருக்கு பால், தயிா், பன்னீா் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னா் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
புன்னம் புன்னைவன நாதா் உடனுறை புன்னைவனநாயகி கோயில், குந்தாணிபாளையம் நத்தமேடு ஈசுவரன் கோயில், திருக்காடுதுறை மாதேசுவரி அம்மன் உடனுறை மாதேசுவரன் கோயில் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சோ்ந்த பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.