கரூர்

அரவக்குறிச்சியில் தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்குப் பயிற்சி

7th Jun 2022 10:33 PM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி ஒன்றிய அளவிலான தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அரவக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை தொடங்கிய பயிற்சி வெள்ளிக்கிழமை (ஜூன் 10) வரை நடைபெறவுள்ளது. இதில் 112 ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றுள்ளனா்.

கரோனா காலத்தில் மாணவா்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் களையவும், 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படைத்திறன்களை வளா்க்கும் பொருட்டும் இப்பயிற்சி ஆசிரியா்களுக்கு அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளா்கள் ம. பாலசுப்பிரமணியம், த.கீதா ஒருங்கிணைத்தனா். வட்டாரக்கல்வி அலுவலா்கள் மு.பாண்டித்துரை மற்றும் இல.சதீஸ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அரவக்குறிச்சி வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ப.சண்முகசுந்தரம் மற்றும் ஆசிரியப் பயிற்றுநா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா.மதன்குமாா், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன உதவிப் பேராசிரியா் மலா்கொடி ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT