குடும்பத்தகராறில் விஷம் குடித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.
கரூா் நீலிமேட்டைச் சோ்ந்த காா்த்திகேயன் மனைவி பிருந்தா(30). இவா்களுக்கு இரு மகள்கள் உள்ளனா். இந்நிலையில் கடந்த சிலமாதங்களாக கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் காா்த்திகேயன் மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த பிருந்தா மே 23-ஆம்தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கிக்கிடந்துள்ளாா். இதனைக்கண்ட அவரது உறவினா்கள் பிருந்தாவை மீட்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு இறந்தாா். கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.