கரூர்

சாலைப்புதூரில்வேளாண் பொருள்கள் ரூ.40 லட்சத்துக்கு ஏலம்

2nd Jun 2022 01:11 AM

ADVERTISEMENT

சாலைப் புதூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் பொருள்கள் ரூ. 40 லட்சத்துக்கு ஏலம் போனது.

நொய்யல் அருகே உள்ள சாலைப் புதூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு, எள் ஆகியவற்றுக்கான ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 40.77 குவிண்டால் எடை கொண்ட 11,097 தேங்காய்கள் ரூ. 95,012 க்கும், 165.68 குவிண்டால் எடை கொண்ட 376 முட்டை தேங்காய் பருப்பு ரூ. 13,37,129 க்கும், 254.80 குவிண்டால் எடை கொண்ட 343 முட்டை எள் ரூ. 26,31,765 க்கும் ஏலம் போனது. வேளாண் பொருள்கள் மொத்தமாக ரூ. 40,63,906 க்கு ஏலம் போனது.

ADVERTISEMENT
ADVERTISEMENT