கரூர்

ஆடி அமாவாசை: கரூா் மாவட்டத்தில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

28th Jul 2022 11:05 PM

ADVERTISEMENT

 

ஆடி அமாவாசையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் அம்மன் கோயில்களில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

கரூா் பெரியமாரியம்மன் கோயில் மற்றும் ஆதிமாரியம்மன் கோயில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் , பஞ்சாமிா்தம், விபூதி, தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு மலா்களால் அலங்கரிக்கப்பட்டு, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதேபோல, புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில், சேமங்கி மாரியம்மன் கோவில், திருக்காடுதுறை பரமேஸ்வரி அம்பிகை கோயில், உப்பு பாளையம் மாரியம்மன் கோவில், புன்னம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT