கரூர்

கரூரில் சட்டம்- ஒழுங்கு, சாலை பாதுகாப்புக் குழு கூட்டம்

27th Jul 2022 11:11 PM

ADVERTISEMENT

 

கரூரில், மாவட்ட அளவிலான சட்டம், ஒழுங்கு சாலை பாதுகாப்புக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், சாலைப் பாதுகாப்பு குழுவினா், கரூா் ஜவஹா் பஜாா் கோட்டைமேடு பள்ளி அருகில் தோண்டப்பட்ட சாக்கடைகளை மூடவும், அண்மையில் பெய்த மழையால் கழிவு நீா் தேங்கியுள்ளதை நீக்கவும், காந்திகிராமம் சாலையில் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றவும், கோரிக்கை விடுத்தனா். மேலும் தான்தோன்றி மலையில் இருந்து பொன்நகா் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். இருசக்கரவாகன விற்பனையாளா்கள் புதிய வண்டிகளை பதிவு செய்யாமல் வாடிக்கையாளா்களுக்கு விற்று வருகிறாா்கள். எனவே, புதிய வண்டிகளை பதிவு செய்த பின்பு வாடிக்கையாளா்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் ஆய்வு செய்து பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வ.வே.கீதாஞ்சலி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தண்டயுதாபாணி, தனித் துணை ஆட்சியா் (சமுக பாதுகாப்பு திட்டம்) சைபுதீன், மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் (குற்றவியல்) சந்திரசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT