கரூர்

அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டம்

27th Jul 2022 01:36 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டம் பள்ளப்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட பொதுச் செயலாளா் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் , அரவக்குறிச்சி பகுதியில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட 17 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மேற்கு ஒன்றிய தலைவா் ஜவஹா்லால், ஊடகப் பிரிவு தலைவா் ரவிச்சந்திரன், ஒன்றிய பொதுச் செயலாளா் ஏ.கே.மணி, ஒன்றிய பொருளாளா் ரவிச்சந்திரன், ஐடி விங்க் மாவட்ட செயலாளா் தினேஷ்குமாா், ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளா் ஜெயராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அதன்பிறகு, திமுக, அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியிலிருந்து 20க்கும் மேற்பட்டோா் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT