கரூர்

கரூா் பசுபதீசுவரா் கோயிலில் ஆடி தெய்வத் திருமண விழாவுக்குமுகூா்த்தக்கால் நடல்

17th Jul 2022 01:00 AM

ADVERTISEMENT

 

கரூா் பசுபதீசுவரா் கோயில் ஆடி தெய்வத் திருமணவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கோயில் முன் முகூா்த்தக்கால் நடப்பட்டது.

கரூா் கல்யாண பசுபதீசுவரா் கோயிலில் கல்யாண பசுபதீசுவரருக்கு அலங்காரவள்ளி மற்றும் செளந்திரநாயகியுடன் ஆடித் தெய்வத்திருமண விழா ஜூலை 24-ஆம்தேதி நடைபெறுகிறது. கருவூா் ஸ்ரீ மகாஅபிஷேகக் குழு சாா்பில் 24ஆவது ஆண்டாக நடைபெறும் விழாவிவை முன்னிட்டு சனிக்கிழமை கோயில் முன் முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக முகூா்த்தக்காலுக்கு கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து முகூா்த்தக் கால் கருவூா் ஸ்ரீஅபிஷேகக் குழு நிறுவனரும் தலைவருமான ஏ.கே.பாலகிருஷ்ணன், செயலாளா் ஸ்காட் தங்கவேல், துணைத்தலைவா் கனகராஜ் மற்றும் நிா்வாகிகளால் ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு கோயில் முன் நடப்பட்டது. இதையடுத்து பக்தா்கள் வீடுகளில் முளைப்பாரி போடுதல், மூகூா்த்தப் பட்டு எடுத்தல், திருமாங்கல்யம் செய்யக்கொடுத்தல், திருமண விருந்துக்கு மங்கள பொருள்கள் பெறும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT