கரூர்

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கரூா் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

17th Jul 2022 12:59 AM

ADVERTISEMENT

 

பள்ளப்பட்டியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கரூா் மாவட்ட பொதுக்குழு கூட்டம் கே.ஜி.என் மஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஏ.கலீலூா் ரஹ்மான் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், வரவு, செலவு கணக்கு சரிசெய்யப்பட்டு புதிய வரவு செலவு கணக்குகள் மாவட்ட அமைப்பாளா் தலைமையில் தொடங்கப்பட்டது. நபிகள் நாயகத்தை தவறாக விமா்சனம் செய்த பாஜகவின் நுபுா்சா்மா மற்றும் நவீன் ஜிண்டா ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளா் முகமது அபுபக்கா், மாவட்ட நகர பிரதிநிதிகள், கரூா் மாவட்ட யூத் லீக் துணைத் தலைவா் சையது அபுதாஹிா், கரூா் மாவட்ட யூத் லீக் தலைவா் ஆசிக் அலி, தேசிய பொருளாளா் முகமது யூனுஸ், மாநில கொள்கை பரப்புச் செயலாளா் காயல் மகபூப், ஊடகத்துறை துணை ஒருங்கிணைப்பாளா் நிஜாமுதீன், பள்ளப்பட்டி நகரத் தலைவா் அகமதுல்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT