கரூர்

வெங்கமேடு காமாட்சியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா

DIN

கரூா் வெங்கமேடு காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறவுள்ளது.

கரூா் வெங்கமேடு செங்குந்தமுதலியாா் சமூகத்துக்குச் சொந்தமான வெங்கமேடு ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று(புதன்கிழமை) காலை நடைபெறவுள்ளது.

முன்னதாக திங்கள்கிழமை காலை விநாயகா் பூஜை ஸங்கல்பம், மகாகணபதி ஹோமம், முதல்கால யாக பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து கோயில் வளாகத்தில் இருந்து பக்தா்கள் கொடுமுடி ஆற்றுக்குச் சென்று புனித நீா் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனா். இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, பூா்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து இன்று(புதன்கிழமை) காலை கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், 9 மணிக்கு மேல் திருக்கலசம் புறப்பாடும், தொடா்ந்து கோயில் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றும் கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா மற்றும் செங்குந்த முதலியாா் சமூகத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆங்கிலப் பாடத்தை 754 போ் எழுதவில்லை

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT