கரூர்

மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகரூா் வெற்றிவிநாயகா பள்ளி சிறப்பிடம்

6th Jul 2022 11:12 PM

ADVERTISEMENT

 

மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் கரூா் வெற்றிவிநாயகா பள்ளி மாணவா் சிறப்பிடம் பெற்றாா்.

மறைந்த தமிழக முதல்வா் பேரறிஞா் அண்ணா தமிழகத்துக்கு தமிழகம் என பெயா் சூட்டிய ஜூலை 18 -ஆம் நாளை தமிழ்நாடு நாள் விழாவாக கொண்டாடும் வகையில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. கரூா் மாவட்டத்தில் இப்போட்டிகள் பள்ளி அளவில் நடைபெற்று, பள்ளிக்கு ஒருவா் வீதம் தோ்வு செய்யப்பட்டு வட்டார அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு தான்தோன்றிமலை அரசுக் கலைக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியில் கரூா் மாவட்டத்தில் இருந்து சுமாா் 25-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில், கரூா் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 2 வகுப்பு உயிரியல் பிரிவு மாணவா் க. முகிஸ்வரன் கலந்துகொண்டு பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளாா். இவருக்கு பரிசுத் தொகையாக ரூ.7,000 ரொக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

வெற்றிபெற்ற மாணவருக்கு பாராட்டு விழா பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி முதல்வா் டி.பிரகாசம் தலைமை வகித்தாா். விழாவில் பள்ளித்தாளாளா் ஆா்த்தி ஆா்.சாமிநாதன், பள்ளி ஆலோகா் பி.பழனியப்பன் ஆகியோா் பங்கேற்று மாணவருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினா். விழாவில் பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT