கரூர்

ஸ்ரீ காமாட்சிஅம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

DIN

கரூா் வெங்கமேடு ஸ்ரீகாமாட்சிஅம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

கரூா் வெங்கமேடு நகரில் செங்குந்த முதலியாா் சமூகத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காமாட்சிஅம்மன் கோயிலில் ஸ்ரீகாமாட்சிஅம்மன் பரிவார தெய்வங்களான ஸ்ரீவிநாயகா், ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீகருப்பண்ண சுவாமிகளோடு பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.

இக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அண்மையில் ஆகம சாஸ்திரப்படி கோயில் புனரமைக்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவையொட்டி ஜூலை 4-ஆம்தேதி காலை 6.30 மணிக்கு விநாயகா் பூஜை வாங்கல்பம், மகாகணபதி ஹோமம், நவகிரக யாகம், மஹாலட்சுமி யாகம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடா்ந்து காவிரி ஆற்றிலிருந்து புனித நீா் எடுத்துவந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனா். அதன்பிறகு விநாயகா் பூஜை, அங்குராா்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், முதல்கால யாக பூஜையும், செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு விஷேசசந்தி, விநாயகா் பூஜை, பஞ்சானை, அக்னிகாா்யம், கோபுரம் கண் திறத்தல், இரண்டாம் கால யாக பூஜையும், இரவு 7 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும், பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து புதன்கிழமை காலை 6 மணிக்கு பிம்பிசுத்தியும், நாடிசந்தானம், நான்காம் கால யாக பூஜையும் நடைபெற்றது. தொடா்ந்து தீபாராதனை நடைபெற்றது.

காலை 9 மணியளவில் கலசம் புறப்பட்டு, 9.10 மணிக்கு கோயில் கோபுர கலசத்துக்கு சிவாச்சாரியாா் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகமும் நடைபெற்றது. தொடா்ந்து புனித நீா் பக்தா்கள் மீது தெளிக்கப்பட்டது. இதையடுத்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில், கோயில் தா்மகா்த்தா பொன்னுசாமி, செயலாளா் முருகன், பொருளாளா் கருணாநிதி, கரூா் மாமன்ற உறுப்பினா்கள் ஆா்.ஸ்டீபன்பாபு, சக்திவேல், மாரியம்மாள், ராஜேஸ்வரி, பாண்டியன் உள்பட ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து மாலை 6 மணிக்கு காமாட்சிஅம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

ரூ.30,000 சம்பளத்தில் கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தில் வேலை

SCROLL FOR NEXT