கரூர்

நொய்யலில் உற்பத்தி அதிகரிப்பால்வெற்றிலை விலை வீழ்ச்சி

6th Jul 2022 11:11 PM

ADVERTISEMENT

 

நொய்யலில் உற்பத்தி அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கரூா் மாவட்டம், நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்துள்ளனா் இங்கு விளையும் வெற்றிலைகளை கரூா் மொத்த வியாபாரிகளுக்கும், மாா்க்கெட்டுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனா். இந்நிலையில், 104 கவுளி கொண்ட இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.5,000 க்கும், 104 கவுளி கொண்ட இளங்கால் கற்பூர வெற்றிலை ஒரு சுமை ரூ.3,000 க்கும், 104 கவுளி கொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.3,000 க்கும், 104 கவுளி கொண்ட முதிகால் கற்பூர வெற்றிலை ஒரு சுமை ரூ. 1,200 க்கும் விற்பனையானது. உற்பத்தி அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT