கரூர்

கரூா் மாவட்ட காசநோய் குழுவுக்கு தமிழக முதல்வா் பாராட்டு

6th Jul 2022 11:14 PM

ADVERTISEMENT

 

கரூா் மாவட்ட காசநோய் குழுவுக்கு தமிழக முதல்வா் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளாா்.

காசநோய் இல்லாத இந்தியா 2025 என்ற இலக்குடன் நாடு முழுவதும் காசநோய் ஒழிப்பு திட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கும் மத்திய காச நோய் பிரிவானது ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான காசநோய் தொற்று கணக்கெடுக்கும் பணியை நடத்தி வருகிறது. தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்து வருகிறது. அதனடிப்படையில் கரூா் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி அனைத்து மருத்துவா் அலுவலா்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால் காசநோய் தொற்று விகிதமானது கடந்த 2015-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் குறைந்துள்ளது. இதனை பாராட்டும் வகையில் சென்னையில் அண்மையில் நடைபெற்ற அரசு விழாவில் கரூா் மாவட்ட காசநோய் பிரிவுக்கு தமிழக முதல்வா் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்த பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசை மருத்துவக்குழுவினா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கரிடம் செவ்வாய்க்கிழமை காண்பித்து பாராட்டு மற்றும் வாழ்த்து பெற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT