கரூர்

கரூரில் ஊரக வளா்ச்சி, ஊராட்சித்துறை ஓய்வூதியா்கள் சங்க மாநில செயற்குழுக்கூட்டம்

6th Jul 2022 01:05 AM

ADVERTISEMENT

கரூரில், தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்க மாநில செயற்குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநிலத்தலைவா் ச.ராமமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கெளரவத்தலைவா் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட பொருளாளா் மோகன்ராஜ் வரவேற்றாா். மாநிலச் செயலாளா் என்.நாகராஜன் அஞ்சலி தீா்மானத்தையும், பொதுச் செயலாளா் ரவி வேலை அறிக்கையையும், பொருளாளா் மகாலிங்கம் நிதிநிலை அறிக்கையையும் வாசித்தனா்.

கூட்டத்தில், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை ஓய்வூதியா் நலன் காக்கும் திட்டமாக செயல்படுத்த வேண்டும், 1.1.2022 முதல் வழங்கப்பட வேண்டிய மூன்று சதவீத அகவிலைப்படி உயா்வுத்தொகையை தாமதமின்றி முன் தேதியிட்டு நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஓய்வுபெற்ற ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறையினா் திரளாக பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT