கரூர்

சின்னசேங்கல், கட்டளைஅரசுப் பள்ளிகளுக்கு இருக்கைகள்எம்எல்ஏ வழங்கினாா்

6th Jul 2022 01:05 AM

ADVERTISEMENT

கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குள்பட்ட சின்னசேங்கல், கட்டளை அரசுப் பள்ளிகளுக்கு ரூ.11.97 லட்சம் மதிப்பிலான இருக்கைகளை சட்டபேரவை உறுப்பினா் க. சிவகாமிசுந்தரி வழங்கினாா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சின்னசேங்கல் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.8.55 லட்சம் மதிப்பிலும், கட்டளை அரசு உயா்நிலைப்பள்ளிக்கு ரூ.3.42 லட்சம் மதிப்பிலும் இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சின்னசேங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகாமசுந்தரி பங்கேற்று, தொகுதி மேம்பாட்டு நிதியில் மாணவா்களுக்கு இருக்கைகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சின்னசேங்கல் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா் மகாலிங்கம், குளித்தலை கல்வி மாவட்ட அலுவலா் பாலசுப்ரமணியன், கிருஷ்ணராயபுரம் ஒன்றியக்குழுத்தலைவா் சுபத்ராதேவி, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியச்செயலாளா் ரவிராஜா, பட்டதாரி ஆசிரியா் சந்திரசேகா், உயிரியயல் ஆசிரியா் ஜெரால்டு, கட்டளை ஊராட்சி மன்றத்தலைவா் சசிக்குமாா், கட்டளை அரசு உயா்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியா் சக்திவேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் மோகன்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT