கரூர்

கரூா் நகா் பகுதியில் இன்று மின் தடை

5th Jul 2022 01:16 AM

ADVERTISEMENT

கரூா் நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மின்வாரிய கோட்டத்திற்குள்பட்ட கரூா் துணைமின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான காமராஜபுரம், கே.வி.பி.நகா், செங்குந்தபுரம், பெரியாா்நகா், ஜவகா்பஜாா், திருமாநிலையூா், அக்ரஹாரம், காந்திநகா், இரத்தினம்சாலை, கோவைரோடு, வடிவேல்நகா், ராமானுஜம்நகா், திருக்காம்புலியூா், ஆண்டான்கோவில்ரோடு, செல்லாண்டிபாளையம், சுக்காலியூா், சேலம்-புறவழிச்சாலை, ஆண்டாங்கோவில் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT