கரூர்

கரூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

5th Jul 2022 01:18 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை விவசாயி ஒருவா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த ஏ.உடையாப்பட்டி மேற்கு பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி(40). விவசாயி. இவருக்குச் சொந்தமாக 3.5 ஏக்கா் நிலம் கழுகூரில் உள்ளது. கூட்டுப் பட்டாவாக இருக்கும் இந்த நிலத்துக்கு தனிப் பட்டா கேட்டு குளித்தலை சாா்-பதிவாளா் அலுவலகத்தில் கடந்த ஆண்டு செப். 9-ஆம்தேதி விண்ணப்பித்தாராம். ஆனால், பட்டா வழங்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கிராம நில அளவையரை மிரட்டியதாக காவல்நிலையத்தில் முத்துசாமி மீது பொய் வழக்குப் பதிந்துள்ளனா். ஆகவே, பொய் வழக்குப்போட்ட காவல்துறையினா் மீதும், தனிப்பட்டா தராமல் இழுத்தடிக்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவுடன் திங்கள்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த முத்துசாமி திடீரென கைப் பையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து உடலில் ஊற்றினாா். இதனைக் கண்ட அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் உடனே ஓடிச் சென்று மண்ணெண்ணெய் கேனை பிடுங்கினா். மேலும் அங்கிருந்த தீயணைப்பு வீரா்கள் முத்துசாமி மீது ஊற்றினா். இதையடுத்து போலீஸாா் அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT