கரூர்

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு ஜூலை 9 கடைசி நாள்

5th Jul 2022 01:20 AM

ADVERTISEMENT

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு ஜூலை 9-ஆம்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காகிதபுரம் டிஎன்பிஎல் ஆலை நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள டிஎன்பிஎல் ஆலையின் அறக்கொடை அறக்கட்டளை சாா்பில் நடத்தப்படும் தொழிற்பயிற்சி நிலையத்தில் எலெக்ட்ரீசியன், பிட்டா், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் பிரிவுகளுக்கு 2 ஆண்டு பயிற்சியும், வெல்டா் பிரிவு மாணவா்களுக்கு ஓராண்டு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் 2 ஆண்டுகள் படிப்புக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சியும், ஓராண்டு பயிற்சிக்கு 8ஆம் வகுப்பு தோ்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். இதில் சேர விரும்பும் விண்ணப்பதாரா்கள், தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை சந்தித்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களை தொழிற்பயிற்சி நிலையத்தின் 04324-296442 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ, தபால்மூலமாகவோ ஜூலை 9-ஆம்தேதி மாலை 5 மணிக்குள் தொழிற்பயிற்சி நிலையத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT