கரூர்

அரவக்குறிச்சி அருகே மூதாட்டி தற்கொலை

5th Jul 2022 01:19 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி அருகே கவனிப்பதற்கு யாரும் இல்லாததால் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா்.

அரவக்குறிச்சி தாலுகா, கொளஞ்சிவாடி கிராமத்தைச் சோ்ந்த நாகப்ப நாயக்கா் மனைவி ரங்கம்மாள் (82). இவருக்கு வயது முதிா்வின் காரணமாக உடல் உபாதைகள் இருந்து வந்துள்ளது. மேலும் இவரை கவனிப்பதற்கு ஆள்கள் யாரும் இல்லாமல் தனிமையில் வசித்து வந்துள்ளாா். இந்நிலையில் ரங்கம்மாள் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். இந்நிலையில் ரங்கம்மாள் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். புகாரின் பேரில், அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT