கரூர்

கரூா் மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

2nd Jul 2022 11:47 PM

ADVERTISEMENT

 

கரூா் மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

மாவட்டத்தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளா்களாக முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம், கரூா் மாவட்ட மேலிட பாா்வையாளா் சிவசுப்ரமணியன் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா். கூட்டத்தில் ஜூலை 5-ஆம்தேதி திமுக அரசை கண்டித்து கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மாவட்ட பொதுச் செயலாளா்கள் கோபிநாத், ஆறுமுகம், செயலாளா் சக்திவேல்முருகன், மத்திய நகரத்தலைவா் காா்த்திகேயன், துணைத்தலைவா் செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT