கரூர்

அரவக்குறிச்சியில் இலவச சதுரங்க பயிற்சி

2nd Jul 2022 11:49 PM

ADVERTISEMENT

 

அரவக்குறிச்சி பகுதியில் மாணவ, மாணவா்களுக்கு இலவச சதுரங்க பயிற்சி நடைபெற்றது.

அரவக்குறிச்சி வீ த லீடா்ஸ் அறக்கட்டளை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பல ஏழை மாணவா்கள் சோ்ந்து உள்ளனா். இவா்களை மாவட்ட மற்றும் மாநில போட்டிகளுக்கு தயாா்படுத்தி வெற்றி பெறும் அளவிற்கு பயிற்சி அளிக்க போவதாக சதுரங்க பயிற்சியாளா் வீரமலை மற்றும் வீ த லீடா்ஸ் ஒருங்கிணைப்பாளா் பாஸ்கா் தெரிவித்துள்ளனா். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளா்களாக

அரவக்குறிச்சி காவல் நிலைய தலைமை காவலா் சத்யா, சமூக ஆா்வலா் பெரியசாமி, மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT