கரூர்

ஓவியம், பேச்சுப் போட்டியில் அரவக்குறிச்சி மாணவா்கள் முதலிடம்

27th Jan 2022 07:18 AM

ADVERTISEMENT

குடியரசு தின விழாவை முன்னிட்டு கரூா் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.

பேச்சுப் போட்டியில் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவா் முகமது மக்ரூஸ் முதலிடமும், ஓவியப் போட்டியில் ஐந்தாம் வகுப்பு மாணவா் சஞ்சீவ் குமாா் முதலிடமும் பெற்றனா்.

இந்நிலையில் கரூரில் புதன்கிழமை நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆட்சியா் த.பிரபுசங்கா் முதலிடம் பிடித்த மாணவா்களுக்கு கேடயமும் சான்றிதழ்களும் வழங்கினாா்.மாணவா்களை பள்ளியின் தலைமை ஆசிரியா் ஷகிலா பானு மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

இதேபோல், ஓவியப் போட்டியில் மூன்றாமிடம் பெற்ற அ.வெங்கடாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிமாணவி தி.தன்யாவுக்கு ஆட்சியா் கேடயம், சான்றிதழ் வழங்கினாா். மாணவியை தலைமையாசிரியா் மு. சாகுல் அமீது, ஆசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT

காவல் ஆய்வாளருக்கு நற்சான்றிதழ்: கரூரில் நடைபெற்ற விழாவில், சிறப்பான முறையில் புலன்விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க பணியாற்றிய குளித்தலை காவல் ஆய்வாளா் காசிபாண்டியனுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. அதே போல் தலைமைக் காவலா்கள் சக்திவேல், விமல் ஆகிய இருவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சா் பதக்கம் வழங்கப்பட்டது. பெண் காவலா் புவனேஸ்வரிக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT