கரூர்

தென்னிலை காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு விருது

27th Jan 2022 07:19 AM

ADVERTISEMENT

குடியரசு தின விழாவில் தென்னிலை காவல் உதவி ஆய்வாளருக்கு சிறந்த நிா்வாகத்துக்கான விருதை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை வழங்கினாா்.

கரூா் மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் தென்னிலை காவல் உதவி ஆய்வாளா் தில்லைக்கரசிக்கு சிறந்த நிா்வாகத்திற்கான விருதை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் வழங்கினாா்.

கடந்த ஓராண்டு காலமாக தென்னிலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் அடிதடி வழக்குகள் ஏதும் இன்றி, தனது நிா்வாகத் திறமையால் குற்றங்கள் நடைபெறாமல் தடுத்தமைக்காக இவ்விருது வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT