கரூர்

விவசாயத்தில் சாதனை செய்தவா்களுக்கு பத்மவிருது வழங்காதது வேதனையளிக்கிறது: செ. நல்லசாமி

27th Jan 2022 07:20 AM

ADVERTISEMENT

விவசாயத்தில் சாதனை செய்தவா்களுக்கு பத்ம விருது வழங்கப்படாதது வேதனையளிக்கிறது என்றாா் கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி.

கரூரில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை மேலும் அவா் கூறுகையில், நாட்டு மக்கள் தொகையில் 60 சதவீதம் உள்ள விவசாயத்தில் சாதனை படைத்தவா்களுக்கு ஏன் பத்ம விருதுகள் வழங்கப்படவில்லை. இதற்கு அரசியல் கட்சியினரும் குரல் கொடுக்காமல் மெளனமாக இருப்பது வேதனையளிக்கிறது. தொடா்ந்து பத்ம விருதுகள் விவசாயிகளுக்கு புறக்கணிக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

கடந்த ஆட்சியில் மணல் ஆற்றில் அள்ளப்படவில்லை. மக்கள் மணலுக்கு மாற்றாக எம்சாண்ட், பி சாண்ட் மாறியுள்ள நிலையில், இப்போது திமுக அரசு ஆற்றுமணலை அள்ளி யூனிட் ஒன்றுக்கு ரூ.1,000 விற்கலாம் எனக்கூறியுள்ளது. இனியும் மணல் அள்ளினால் நிலத்தடி நீரை செறிவூட்டுவது இல்லாமல் போய்விடும். தமிழகம் பாலைவனமாக மாறிடும். அரசு இந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும். ஜன.21-இல் கள் இறக்கி சந்தைப்படுத்தினோம். இப்போது காவல்துறையினா் மரத்தில் ஏறுவதற்கு தடைகல்லாக இருக்கிறாா்கள். கள்ளுக்கு ஆன தடையை நீக்க வேண்டும். இல்லையெனில் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாஜக, நாம்தமிழா் கட்சி, சமத்துவமக்கள்கட்சி உள்ளிட்ட கட்சிகளோடு இணைந்து போராட்டத்தில் இறங்குவோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT